Tamilசெய்திகள்

இந்தியாவில் தங்க நகைகளில் 10% ரீனியம் உலோகம் கலந்து விற்பனை செய்யும் அதிநவீன மோசடி அம்பலம்!

இந்தியாவில் உள்ள தங்க நகைக்கடைகளில் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வகையில் விற்கப்படும் தங்க நகைகளுடன் சுமார் 10 சதவீதம் அளவிற்கு ‘ரீனியம்’ (Rhenium) என்ற உலோகம் ரகசியமாகக் கலந்து விற்கப்படும் புதிய மற்றும் அதிர்ச்சியூட்டும் மோசடி வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

தங்கத்தின் அடர்த்தி, எடை மற்றும் நிறத்துடன் அச்சு அசலாகப் பொருந்தக்கூடிய இந்த அரிதான ரீனியம் உலோகத்தைத் தங்கத்துடன் குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கும் போது, நகைக்கடைகளில் தூய்மையைச் சரிபார்க்கப் பயன்படுத்தும் வழக்கமான எக்ஸ்-ரே ப்ளுரொசென்ஸ் (XRF) போன்ற நவீன தங்கம் பரிசோதனை இயந்திரங்களிலும் இது கண்டுபிடிக்கப்படாமல் தங்கம் போன்றே துல்லியமாகத் தெரிவது கண்டறியப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலையைக் காட்டிலும் மிகக் குறைந்த விலை கொண்ட இந்த உலோகத்தைத் தங்கத்தில் ரகசியமாகச் சேர்ப்பதன் மூலம் நகை வியாபாரிகள் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் ஈட்டி வருவதாகவும், இதனால் பொதுமக்களும் நகை வாங்குவோரும் மிகப்பெரிய அளவில் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களின் வர்த்தகத்தில் நம்பகத்தன்மையைக் கேள்விகுறியாக்கும் வகையில் அரங்கேறி வரும் இந்த உலோகக் கலப்பு மோசடி விவகாரம், நகை வர்த்தக வட்டாரத்திலும் நுகர்வோர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.