Tamilசெய்திகள்

கங்கை ஆற்றின் மீது பிரியாணி சாப்பிடுவது குற்றமா ? – 3 மாதங்களாக நடைபெற்ற வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்த உச்ச நீதிமன்ற நீதிபதி

கங்கை ஆற்றின் மீது அல்லது அதன் பகுதியில் பிரியாணி சாப்பிடுவது எந்தச் சட்டத்தின் கீழும் தடை செய்யப்படவில்லை என்றும், அது குற்றமும் அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜால் புியான், அத்தகைய சாதாரணச் செயலுக்காகச் சிலரைத் கைது செய்து கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ந்து ஜாமீன் கூட வழங்காமல் சிறையில் அடைத்திருப்பதை வன்மையாகக் கண்டித்துள்ளார்;

“இதுபோன்று எந்தவிதச் சட்டப்பூர்வக் குற்றமும் இல்லாமல் குடிமக்களை மாதக்கணக்கில் சிறையில் அடைக்க முடியுமா? குடிமக்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று உச்ச நீதிமன்ற அமர்வில் நீதிபதி உஜ்ஜால் புியான் கேள்வி எழுப்பியுள்ளதுடன், தனிமனித சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் மீதான இதுபோன்ற அதீத நடவடிக்கைகளுக்குத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.