தமிழக கோவில்களில் பக்தர்கள் செல்போன்கள் எடுத்துவர விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!
தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குள் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதியைக் கருத்தில்கொண்டு, இதற்கு முன்பு செல்போன்களை உள்ளே கொண்டு செல்ல விதிக்கப்பட்டிருந்த முழுமையான தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது;
இதன் அடிப்படையில் பக்தர்கள் தங்களது செல்போன்களை ‘சுவிட்ச் ஆப்’ (Switch Off) செய்யப்பட்ட நிலையில் கோயிலுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதே சமயத்தில், கோயிலின் புனிதத்தன்மையைக் காக்கும் பொருட்டு, செல்போன்களை ஆன் செய்யவோ அல்லது கோயிலின் உட்பகுதிகளில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கவோ முழுக் தடை தொடர்வதுடன், மீறி விதிகளை மீறுவோர் மீது கடுமையான துறைசார் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறநிலையத்துறை திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.
