16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடை!
பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாக்குவதற்கான வளர்ந்து வரும் உலகளாவிய முயற்சியில் கனடாவும் இணைந்துள்ளது. அதன்படி, நிறுவனங்கள் தங்கள் தளங்களை பாதுகாப்பனதாக மாற்ற முடியும் என்பதை நிரூபிக்காத வரையில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருப்பதைத் தடை செய்யக்கூடிய ஒரு சட்டத்தை கனடா அறிமுகப்படுத்துகிறது.
மேலும், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தால், சமூக ஊடகத்தளங்களுக்கு விலக்கு அளிக்கப்படலாம் என்றும் கனடா அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளை தங்களை தாங்களே காயப்படுத்திக்கொள்ள தூண்டும் உள்ளடக்கம், வன்முறையை தூண்டு வெறுப்பை வளர்க்கும் உள்ளடக்கம் மற்றும் அனுமதியின்றி எடுக்கப்பட்ட அந்தரங்க படங்கள் உள்ளிட்ட ஏழு வகையான தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை இந்த சட்டம் உள்ளடக்கியுள்ளது.
கனடா டிஜிட்டல் பாதுகாப்பு ஆனையம் என்ற புதிய ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்படும். விலக்குகள் எப்படி இருக்கும் என்பதற்கான அளவுகோல்கள் பின்னர் அறிவிக்கப்படும். இந்த ஒழுங்குமுறை ஆணையத்தை அமைப்பதற்கு 18 மாதங்கள் வரை ஆகலாம் என்றும் அந்நாட்டு அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
