5ஜி சேவையை தொடங்க பி.எஸ்.என்.எல் திட்டம்
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL), தனது 5ஜி (5G) சேவைகளை அடுத்த 5 முதல் 6 மாதங்களுக்குள் தொடங்க தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் 4ஜி நெட்வொர்க் விரிவாக்கப் பணிகளை வேகப்படுத்தி வரும் பிஎஸ்என்எல், இதற்காக அமைக்கப்பட்ட சுதேசி 4ஜி டவர்களை மிக எளிதாக 5ஜி தொழில்நுட்பத்திற்கு தரம் உயர்த்தக்கூடிய (Upgradable) அமைப்பில் நிறுவியுள்ளது.
இந்த 5ஜி சோதனைகள் (Testing Trials) ஏற்கனவே திருப்திகரமான முடிவுகளை வழங்கி வரும் நிலையில், முதற்கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய வட்டாரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டு, பின்னர் நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக அதிவேக டேட்டா மற்றும் குறைந்த கட்டணத்தில் 5ஜி சேவையை சாமானிய மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதை இலக்காகக் கொண்டு பிஎஸ்என்எல் இக்கட்டமைப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
