Tamilசெய்திகள்

கனக துர்கா அம்மன் கோவிலில் முதல்வர் ஜோசப் விஜய் தரிசனம்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலுக்கு தமிழக முதல்வர் விஜய் வருகை தந்துள்ள விவகாரம் பேசுப்பொருளாகியுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மொரிஷியஸ் அதிபர் தரம்வீர் கோஹூல், மகாராஷ்டிராவின் முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் துணைக்குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் ஏற்கனவே இங்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.

வழக்கமான இந்துக் கோயில்களில் இறைவி தனது கணவனின் இடதுபுறத்தில் அமர்வது வழக்கம் என்றாலும், இக்கோயிலில் பார்வதி தேவியான துர்கை சிவனின் வலதுபுறத்தில் அமர்ந்து அருள்வாக்கு வழங்குவதுடன், ஆதிசங்கரரால் ஸ்ரீசக்கரம் நிறுவப்பட்ட இந்தத் தலத்தில் அருச்சுனன் பாசுபத அஸ்திரத்தைப் பெறுவதற்காகத் தவம் செய்ததாகவும் நம்பப்படுகிறது.

அரசியல் தலைவர்கள் தங்கள் தேர்தல் வெற்றிகளுக்காகவும் புதிய திட்டங்கள் நிறைவேறவும் இங்கு வந்து அம்மனுக்குத் தங்க நகைகள் மற்றும் காணிக்கைகளைச் செலுத்துவது வழக்கமாக உள்ளதால், நவராத்திரி மற்றும் தசரா விழாக்களில் விவிஐபிகள் மற்றும் பிரபலங்கள் பலரும் வருகை தந்து சிறப்புப் பூஜைகளைச் செய்கின்றனர்.