நச்சு நுறை படிந்த யமுனை நதியில் நீராடி சாத் பூஜையை கொண்டாடிய பக்தர்கள்
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள யமுனை ஆற்றில் மாசு மற்றும் நச்சு நுரை படிந்துள்ள போதிலும், பக்தர்கள் பயபக்தியுடன் சாத் பூஜையைக் (Chhath Puja) கொண்டாடி வருகின்றனர். சூரிய பகவானுக்கும் சத்தி மையாவுக்கும் (Chhathi Maiya) நன்றி செலுத்தும் விதமாக நடத்தப்படும் இந்த நான்கு நாள் பண்டிகையில், ஏராளமான ஆண்களும் பெண்களும் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் நொய்டா நதிக்கரைகளில் திரண்டனர்.
ஆற்றின் நீர் மிகவும் மாசடைந்து, வெள்ளை நிற நச்சு நுரைகள் மிதப்பதைப் பொருட்படுத்தாமல், பக்தர்கள் இடுப்பளவு தண்ணீரில் இறங்கிப் புனித நீராடி, சூரியனுக்கு அர்க்கியம் (Arghya) படைத்து வழிபட்டனர். நொய்டா மற்றும் டெல்லி எல்லைப் பகுதிகளில் உள்ள யமுனை நதிக்கரைகளில் ஆண்டுதோறும் சாத் பூஜையின் போது கடுமையான நீர் மாசுபாடு மற்றும் நச்சு நுரை பிரச்சினை தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் பக்தர்களின் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், தங்கள் பாரம்பரிய நம்பிக்கை மற்றும் விரதத்தை நிறைவேற்றுவதற்காகப் பக்தர்கள் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் இந்த வழிபாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
