Tamilசெய்திகள்

தவெக நிர்வாகியிடம் இருந்து போதைப் பொருள் பறிமுதல் – எடப்பாடி பழனிசாமி எழுப்பும் கேள்விகள்

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகி பூபாலன் என்பவரிடமிருந்து சுமாா் ரூ. 400 கோடி மதிப்பிலான 137 கிலோ மெத்தபெட்டமைன் (methamphetamine) போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விவகாரத்தில், முதல்வர் ஜோசப் விஜய் இதுவரை மௌனம் காப்பது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தால் (DRI) மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையைச் சுட்டிக்காட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, கடந்த காலத்தில் திமுக மீது போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக வைக்கப்பட் குற்றச்சாட்டுகளையும் இதனுடன் ஒப்பிட்டுள்ளார்.

ஆட்சிக்கு வந்தவுடன் போதைப்பொருளுக்கு எதிராக மாரத்தான் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திய தவெக அரசு, ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியே மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தலில் சிக்கியுள்ள நிலையில் வாய் திறக்காமல் இருப்பது முரணாக உள்ளதாகவும், நாகப்பட்டினம் நகரச் செயலாளர் பல்ராஜ் ஊடகங்களை அச்சுறுத்தியது குறித்துக் கட்சித் தலைமை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.