பின் தொடர்ந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்!
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் கொண்ட பட்டியலில் இருப்பவர் நடிகர் அஜித். இவருடைய படங்கள் வெளியாகும் போதும், அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவார்கள். தற்போது அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து அஜித் வீடு திரும்பும்போது, அவரது ரசிகர் ஒருவர் விமான நிலையத்தில் இருந்து காரை பின் தொடர்ந்து வந்திருக்கிறார். அதையறிந்த அஜித், ரசிகருக்கு அறிவுரை கூறி நெகிழ வைத்திருக்கிறார்.
இதுகுறித்து ரசிகர் கூறும்போது, ‘என் வாழ்நாளில் இதோடு நான்கு முறை தலயை சந்தித்து உள்ளேன் இதுவரை புகைப்படம் எடுத்ததில்லை. ஆனால் நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் தலயை சந்தித்தேன் கூட்ட நெரிசலில் தலயுடன் புகைப்படம் எடுக்க முடியவில்லை. தல அவர்களின் காரை பின் தொடர்ந்தோம் 18Km..
சற்று தொலைவில் தல கார் நிறுத்த சொல்ல டிரைவர் இறங்கி வந்தார்.தல அழைத்தார் தல கூறியது என்னை நெகிழ வைத்தது. என் தம்பி உன் பெயர் என்ன என்றார். கணேஷ் என்றேன் தல உடனே கணேஷ் தம்பி இதுமாதிரி பின் தொடர்ந்து வருவதால் விபத்து ஏற்பட்டால் எனக்கு தான் ரொம்ப கஷ்டமா இருக்கும். இது தவறு என்றார். உடனே Sorry அண்ணா என்றேன்.
உடனே தல, வா கணேஷ் போட்டோ எடுத்துக. ரொம்ப Tired ah இருக்கு அப்படியே எடுத்துக்கிறிங்களா என்று கேட்டார். அதுவே போதும் அண்ணா என்றேன். போட்டோ எடுத்தபின் விஸ்வாசம் கண்டிப்பா வெற்றி ஆகும் சார் என்றேன் Thanks கணேஷ் என்று என் பெயரை மூன்று முறை அழைத்தார்.
நான் சொர்க்கத்திற்கே சென்று விட்டேன். என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்’ என்றார்.