முன்னாள் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஜாமீன் கிடைத்தது
இலங்கை அதிபராக 2022 முதல் 2024 வரை பணியாற்றியவர் ரணில் விக்ரமசிங்கே. ஆறு முறை பிரதமராகவும் இருந்தவர். இவர் அதிபராக இருந்த போது அரசுப்பணத்தை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில் 2025 ஆகஸ்ட் 22-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு கொழும்பு கோட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மருத்துவ காரணங்களுக்காக ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
