Tamilசெய்திகள்

நடிகருக்கும் உண்மையான தலைவருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் கையில்தான் ஆட்சி சென்றுள்ளது – சீமான் காட்டம்

நாம் தமிழர் கட்சியில் புதிதாக ஆயிரம் உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்றுப் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போதைய ஆளும்கட்சியை மிகக் கடுமையாக விமரிசித்துப் பேசியுள்ளார்.

நடிகருக்கும் உண்மையான தலைவருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் கையில்தான் ஆட்சி சென்றுள்ளதாகவும், பிளாக்கில் டிக்கெட் விற்ற கூட்டமெல்லாம் தங்களை திரள்நிதி வாங்கும் கூட்டம் என்று விமர்சிப்பதாகச் சாடிய அவர், ‘எங்களைத் திரள்நிதி திருடர்கள் என்று கூறுகிறார்கள், ஆனால் திரள்நிதியில் பெறப்படும் பணத்தில் ஒரு தேநீர் கூட அருந்தமாட்டோம்’ என ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

மேலும், தன் உறவினர் ஒருவரே அன்பளிப்பாக பென்ஸ் காரை வாங்கி வந்து வீட்டு வாசலில் நிறுத்திவிட்டுச் சென்றதாகத் தெளிவுபடுத்திய அவர், மக்கள் பணத்தை வீணடிக்க மாட்டோம் என்று கூறியவர்கள், இன்று பேருந்து நிலையங்கள் தோறும் கோடிக்கணக்கில் செலவழித்து விளம்பரப் பதாகைகளை வைத்துள்ள வெறும் ரீல்ஸ் அரசாகச் செயல்படுவதாகச் சாடியதுடன், தேர்தல் களத்தில் ஆட்டம் மாறிவரும் என்றும், இடைத்தேர்தல் எப்போது வரும் என்ற வெறியோடு காத்துக்கொண்டிருப்பதாகவும் ஆவேசமாகத் தெரிவித்தார்.