Tamilசெய்திகள்

தமிழகத்தில் பிரத்யேக உணவு வீதிகள் அமைக்க அரசு திட்டம்! – அமைச்சர் டாக்டர்.அருண்ராஜ் தகவல்

தமிழ்நாட்டில் வீதியோர உணவு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஒரே மாதிரியான வடிவமைப்பு கொண்ட துருப்பிடிக்காத எஃகு (Stainless Steel) விற்பனை வண்டிகளை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய முக்கிய மாநகராட்சிகளில் பிரத்யேக உணவு வீதிகள் (Food Streets) அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழலில் மக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம், வீதியோர வியாபாரிகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய வண்டிகள் வழங்கப்பட்டு அவர்களது தொழிலும் முறைப்படுத்தப்படவுள்ளது.