16 வது முறையாக ‘இந்தியா மற்றும் தெற்காசியாவின் மிகச்சிறந்த குறைந்தகட்டண விமான நிறுவனம்’ விருதை வென்ற இண்டிகோ
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்கைட்ராக்ஸ் (Skytrax) உலக விமான நிறுவன விருதுகள் 2026 நிகழ்வில், இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), ‘இந்தியா மற்றும் தெற்காசியாவின் மிகச்சிறந்த குறைந்தகட்டண விமான நிறுவனம்’ (Best Low-Cost Airline in India & South Asia) என்ற விருதை வென்று சாதனை படைத்துள்ளது.
இண்டிகோ நிறுவனம் இந்த விருதைப் பெறுவது இது 16-ஆவது முறை என்பதும் குறிப்பிடத் தக்கது. இதுமட்டுமின்றி, ‘சிறந்த கேபின் க்ரூ’ (Best Cabin Crew) மற்றும் ‘மிகவும் தூய்மையான விமான நிறுவனம்’ (Cleanest Airline) ஆகிய பிரிவுகளிலும் இண்டிகோ விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது.
100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2.48 கோடிக்கும் அதிகமான பயணிகளிடம் நடத்தப்பட்ட சர்வதேச திருப்தி வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், சரியான நேர நிர்வாகம், குறைந்த கட்டணம் மற்றும் நம்பகமான சேவைக்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதாகப் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
