கன்னட படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய இயக்குநர் முத்தையா!
சசிகுமாரின் ‘குட்டிப் புலி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. இப்படத்தை அடுத்து கார்த்தியின் ‘கொம்பன்’, விஷாலின் ‘மருது’, சசிகுமாரின் ‘கொடிவீரன்’ ஆகிய படங்களை இயக்கினார். தற்போது ‘தேவராட்டம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் முத்தையா.
இதில் ஹீரோவாக கெளதம் கார்த்திக் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார். மேலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘டகரு’ என்ற கன்னட படத்தின் ரீமேக் உரிமையை இயக்குனர் முத்தையா கைப்பற்றி இருக்கிறார். ஷிவராஜ்குமார் ஹீரோவாக நடித்திருந்த ‘டகரு’ படம் சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.