சாட்ஜிபிடி பயனர்களுக்காக விளம்பரங்களை அறிமுகப்படுத்தும் ஓபன் ஏஐ
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐ (OpenAI), இந்தியாவில் உள்ள இலவச சாட்ஜிபிடி (ChatGPT) பயனர்களுக்காக விளம்பரங்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு சேவைகளுக்கான உள்கட்டமைப்புச் செலவுகளை ஈடுசெய்யவும், இலவசப் பயனர்களுக்குச் தொடர்ந்து சேவையை வழங்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பயனர் கேட்கும் கேள்விகள் மற்றும் உரையாடல்களின் தன்மைக்கு ஏற்ப, அதற்குப் பொருத்தமான விளம்பரங்கள் திரையின் கீழ் பகுதியில் பிரத்யேகமாகக் காண்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பணம் செலுத்திப் பயன்படுத்தும் சப்ஸ்கிரைப் பயனர்களுக்கு விளம்பரங்கள் எதுவும் இருக்காது என்றும், பயனர்களின் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் ஓபன்ஏஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
