Tamilசெய்திகள்

த.வெ.க தொண்டர்கள் ஒட்டிய சர்ச்சை போஸ்டர்! – காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) மத்திய மாவட்ட நிர்வாகிகள் சார்பாக ஒட்டப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

ண்மையில் அதிமுகவிலிருந்து விலகி த.வெ.க-வில் இணைந்த சுதாகர் மற்றும் கட்சிப் பொறுப்பாளர் சுதாகர் (B.Sc., MBA) ஆகியோரின் பெயர்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில், த.வெ.க தலைவர் C. ஜோசப் விஜய்யை “நல்லாட்சி நாயகர், இன்றைய முதல்வர், நாளைய பிரதமர்” என்று குறிப்பிட்டு பிரம்மாண்டமாகச் சித்தரித்துள்ளனர்.

மேலும், “நாள்தோறும் மக்கள் நலத்திட்டங்கள்! சொன்னதைச் செய்யும் தளபதி!” என்ற முழக்கங்களுடன், ஆண்டிற்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் பேருந்துகளில் மாவட்ட அளவில் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயணம் உள்ளிட்ட வாக்குறுதிச் சிறப்பம்சங்களும் இந்த போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளன.

கூட்டணி அரசியலில் சுமுகமான சூழல் நிலவி வரும் வேளையில், த.வெ.க தொண்டர்களின் இந்த நடவடிக்கை கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் அதிருப்தியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள், த.வெ.க இன்னும் ரசிகர் மன்றக் மனநிலையிலேயே செயல்பட்டு வருவதாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததுடன், தங்கள் தரப்பு பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி மட்டுமே என்பதில் உறுதியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தூத்துக்குடி மாநகர வீதிகள் மற்றும் மேம்பாலச் சுவர்களில் த.வெ.க-வினரால் வரிசையாக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களின் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.