பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் – 153 ரன்களில் ஆல் அவுட் ஆன நியூசிலாந்து
பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் அபுதாயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. ராவல், லாதம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராவல் 7 ரன்னிலும், லாதம் 13 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் தாக்குப்பிடித்து விளையாடினார். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுக்கள் சரிந்து கொண்டே இருந்தது. கேன் வில்லியம்சன் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 66.3 ஓவரில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 3 விக்கெட்டும் முகமது அப்பாஸ், ஹசன் அலி, ஹரிஸ் சோஹைல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.