மிகப்பெரிய 8000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பிரீமியம் ட்ரூகலர் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் அறிமுகமாகும் ’ரெட்மி நோட் 17’
இந்தியாவின் மிகவும் நம்பகமான ஸ்மார்ட்போன் தொடரின் புதிய மாடலான ரெட்மி நோட் 17 5ஜி-ஐ அறிமுகப்படுத்துவதாக சியோமி இந்தியா இன்று அறிவித்தது. பேட்டரி தீர்ந்துவிடும் என்ற கவலையை நீக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ரெட்மி நோட் 17, ரெட்மி-யின் இதுவரை இல்லாத மிகப்பெரிய 8000 எம்ஏஎச் சிலிகான்-கார்பன் பேட்டரி, பிரீமியம் ட்ரூகலர் அமோலெட் டிஸ்ப்ளே, நம்பகமான ஸ்னாப்டிராகன் செயல்திறன் மற்றும் நீண்டகால மென்பொருள் ஆதரவுடன் முழுமையான ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குகிறது.
ரெட்மி நோட் 17-ல் ரெட்மி-யின் மிகப்பெரிய 8000 எம்ஏஎச் சிலிகான்-கார்பன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது வழக்கமான பயன்பாட்டில் 3 நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் மெலிந்த 8.4 மிமீ வடிவமைப்பையும் தக்க வைத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்45 வாட் டர்போ சார்ஜிங் வசதியை ஆதரிக்கிறது மற்றும் சார்ஜர் பெட்டியிலேயே வழங்கப்படுகிறது. மேலும் இதில் 22.5 வாட் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதியும் உள்ளது. டீயூவி சான்றளிக்கப்பட்ட இந்த பேட்டரி, 1,600 சார்ஜிங் சைக்கிள்களுக்கு பிறகும் அதன் அசல் திறனில் 80% வரை பேட்டரி ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
தினசரி பொழுதுபோக்கு அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், இந்த ஸ்மார்ட்போனில் 12.75 செ.மீ (6.9 இன்ச்) ட்ரூகலர் அமோலெட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் 120 ஹெர்ட்ஸ்அடாப்டிவ்சிங்க் புதுப்பிப்பு வீதம், 100% டிசிஐ-பி3 கலர் கேமட் மற்றும் 1800 நிட்ஸ் வரை உச்ச பிரகாசம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. சிறந்த அனுபவத்திற்காக இதில் 200% வால்யூம் ஸ்பீக்கர்கள், ஈரமான கைகளிலும் சிறந்த தொடு பதிலளிப்பிற்கான ஹைட்ரோடச் 2.0, மேலும் வசதியான பார்வை அனுபவத்திற்காக டீயூவி ரைன்லாந்து ஐ கேர் சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.
மேம்பட்ட 4 நானோமீட்டர் செயல்முறையை அடிப்படையாகக் கொண்ட ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 மொபைல் பிளாட்ஃபார்முடன் இயங்கும் ரெட்மி நோட் 17, சிறந்த தினசரி செயல்திறனுடன் மேம்பட்ட பவர் திறனையும் வழங்குகிறது. இதில் 16 ஜிபி வரை ரேம் (மெமரி எக்ஸ்டென்ஷன் உட்பட), 2 டெராபைட் வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு வசதி, 10,416 மிமீ² கிராஃபைட் குளிரூட்டும் அமைப்பு மற்றும் சியோமி -யின் லாங்-டெர்ம் ஃப்ளூயன்சி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த சாதனம் 48 மாதங்கள் வரை சீரான செயல்திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புகைப்படம் எடுப்பதற்காக ரெட்மி நோட் 17-ல் 50 மெகாபிக்சல் ஏஐ டூயல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் ஏஐ முன்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் நைட் மோட், ஏஐ எச்டிஆர், டைனமிக் ஷாட்ஸ், ஏஐ எடிட்டர் மற்றும் 2x இன்-சென்சார் ஜூம் போன்ற ஏஐ அடிப்படையிலான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இவை ஒவ்வொரு தருணத்தையும் சிறந்த தரத்துடன் பதிவு செய்ய உதவுகின்றன.
ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 3-இல் இயங்கும் ரெட்மி நோட் 17 4 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் 6 ஆண்டுகள் பாதுகாப்பு புதுப்பிப்புகள் ஆகியவற்றுடன் வருகிறது. ஸ்மார்ட்போனில் கூடுதல் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 7 ஐ, தூசி மற்றும் நீர் பாதுகாப்பிற்காக ஐபி65 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டார்க் நைட், ஆர்க்டிக் ப்ளூ மற்றும் ஸ்டார்லைட் பர்பிள் நிறங்களில் கிடைக்கும்.
விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள்:
ரெட்மி நோட் 17 டார்க் நைட், ஆர்க்டிக் ப்ளூ மற்றும் ஸ்டார்லைட் பர்பிள் நிறங்களில் பின்வரும் சேமிப்பு வகைகளில் கிடைக்கும்:
சாதனம் வகை எம்ஆர்பி அறிமுக விலை*
ரெட்மி நோட் 17 5ஜி 6 ஜிபி + 128 ஜிபி ₹27,999 ₹24,999
8 ஜிபி + 128 ஜிபி₹30,999₹27,999
அறிமுக விலையில் எஸ்பிஐ கார்டு, ஆக்சிஸ் வங்கி மற்றும் கோடக் வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ₹3,000 உடனடி வங்கி தள்ளுபடி சேர்க்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் ஜியோ ட்ரூ 5G உடன் 5 டிபி ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் , 3 மாதங்கள் யூடியூப் பிரீமியம் லைட் உறுப்பினர் சேவை மற்றும் 6 மாதங்கள் கூகுள் ஒன் (200 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ்) உறுப்பினர் சேவை ஆகியவற்றையும் பெறுவார்கள்.
ரெட்மி நோட் 17 விற்பனை 13 ஆகஸ்ட் 2026 அன்று மதியம் 12:00 மணிக்கு (ஐஎஸ்டி) முதல் எம்ஐ டாட் காம், அமேசான் ஸ்பெஷல்ஸ் மற்றும் சியோமி ரீடெயில் ஸ்டோர்களில் தொடங்கும்.
