Tamilசெய்திகள்

23 ஆண்டுகளை நிறைவு செய்த SIP Academy – 16 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் திறன் மேம்பாட்டில் சாதனை

இந்தியாவின் முன்னணி பள்ளிக்குப் பிந்தைய திறன் மேம்பாட்டு கல்வி நிறுவனங்களில் ஒன்றானSIP Academy, தனது23-வதுஆண்டு நிறைவைசிறப்பாகக் கொண்டாடியது. கடந்த 23 ஆண்டுகளாக குழந்தைகளின் கல்வி, திறன் மற்றும் ஆளுமை வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் SIP Academy, இதுவரை 16 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

2003-ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட SIP Academy, தற்போது இந்தியா முழுவதும்1,250-க்கும் மேற்பட்ட மையங்கள்மூலம் செயல்பட்டு வருகிறது. SIP Abacus, Globalart, MiKidsமற்றும் CriCo English உள்ளிட்ட பயிற்சி திட்டங்கள் மூலம் கணிதத் திறன், கவன ஒருமைப்பாடு, படைப்பாற்றல், தொடர்புத் திறன் மற்றும் தன்னம்பிக்கை போன்ற வாழ்வுத் திறன்களை குழந்தைகளிடம் வளர்த்து வருகிறது.

இந்த ஆண்டு, கல்வி, சர்வதேச அளவிலான போட்டிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆரம்பக் கல்வி ஆகிய துறைகளில் பல முக்கிய மைல்கற்களை SIP Academy எட்டியுள்ளது.

சர்வதேச அரங்கில் இந்தியக் குழந்தைகளின் திறமையை வெளிப்படுத்திய இரண்டு போட்டிகள்

SIP Abacus International Prodigy Competition 2025 சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 6 முதல் 12 வயதுக்குட்பட்ட 5,700-க்கும் மேற்பட்ட குழந்தைகள்பங்கேற்று, தங்களின் வேகம், துல்லியம், கவன ஒருமைப்பாடு மற்றும் மனக்கணக்குத் திறனை வெளிப்படுத்தினர்.

உலகின் மிகப்பெரிய சர்வதேச அபாகஸ் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தப் போட்டி, லிம்கா சாதனைப் புத்தகத்தில் நான்கு முறை இடம்பெற்றுள்ளது. அதேபோல், 15 ஆண்டுகளுக்குப் பிறகு Globalart International Competition மீண்டும் இந்தியாவில், சென்னையில் நடைபெற்றது. இதில் 14 நாடுகளைச் சேர்ந்த 500 இளம் ஓவியர்கள்பங்கேற்றனர்.

“My World of AI” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 5 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள், செயற்கை நுண்ணறிவு உலகை தங்களது கற்பனை மற்றும் படைப்பாற்றலின் மூலம் ஓவியங்களாக வெளிப்படுத்தினர்.

2005-ஆம் ஆண்டு SIP Academy அறிமுகப்படுத்தியGlobalart India, இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குபயிற்சி வழங்கியுள்ளதுடன், தற்போது 8 மாநிலங்களில் 150-க்கும் மேற்பட்ட மையங்கள்மூலம் செயல்பட்டு வருகிறது.

கல்வியைத் தாண்டி சுற்றுச்சூழலுக்கும் பங்களிப்பு

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தனது சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக, SIP Academy இந்த ஆண்டில்மேலும் 3 மியாவாக்கி காடுகளை உருவாக்கியுள்ளது.இதன் மூலம், நிறுவனம் உருவாக்கிய மியாவாக்கி காடுகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதுடன், மொத்தம் 25,400 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

கல்வி என்பது புத்தக அறிவில் மட்டுமல்ல; சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பொறுப்புணர்வையும் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

20 ஆண்டுகளை நிறைவு செய்த MiKids India

SIP Academy-யின் ஆரம்பகால ஆங்கில மொழி வளர்ச்சி திட்டமான MiKids India, தனது 20-வது ஆண்டு விழாவைஇந்த ஆண்டு கொண்டாடுகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக, சிறுவர்களுக்கு Phonics, சொற்களஞ்சியம், வாசிப்புத் திறன், புரிந்துகொள்ளும் திறன் மற்றும் ஆங்கிலப் பேச்சுத் திறன்ஆகியவற்றை வயதுக்கேற்ற முறையில் கற்பித்து வலுவான அடித்தளத்தை உருவாக்கி வருகிறது.

இதுகுறித்து SIP Academy-யின் நிர்வாக இயக்குநர் தினேஷ் விக்டர் கூறுகையில், “கடந்த 23 ஆண்டுகளில் எங்களது கல்வித் திட்டங்கள் மூலம் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் திறன் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஆண்டில் நடைபெற்ற சர்வதேச போட்டிகள், MiKids India-வின் 20-வது ஆண்டு சாதனை மற்றும் ஆறு மியாவாக்கி காடுகள் ஆகியவை, கல்வியைத் தாண்டி சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பங்களிக்க வேண்டும் என்ற எங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றன.” என்று தெரிவித்தார்.

SIP Academy தனது 24-வது ஆண்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு தனது சேவையை விரிவுபடுத்தி, கல்வித் திட்டங்களை மேலும் வலுப்படுத்தி, குழந்தைகள் கற்கவும், போட்டியிடவும், படைக்கவும், தன்னம்பிக்கையுடன் வளரவும் அதிக வாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.