அதிவேகத்தில் ரூ.100 கோடியை வசூல் செய்த ‘சர்கார்’
விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பழ கருப்பையா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சர்கார் படம் ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது படக்குழுவை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. விஜய் படம் ஒன்று இரண்டு நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா, மெர்சல், சர்கார் என 6 படங்கள் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. ஆனால் சர்கார் தான் அதிவேகத்தில் ரூ.100 கோடி வசூல் செய்த படம்.
வார நாட்களிலேயே சர்கார் வசூல் செய்துள்ள நிலையில் வார இறுதி நாட்கள் வருவதால், வசூலில் நிச்சயம் மேலும் பல புதிய சாதனைகள் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.