Tamilசெய்திகள்

நீரிழிவு சிகிச்சைக்கு காப்புரிமை பெற்ற மூலிகை மருந்துத் தயாரிப்பு உரிமத்தை ‘டாக்டர் ஸ்ரீவர்மாஸ் வெல்னஸ்’ நிறுவனத்திற்கு வழங்கிய எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்

பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சிகளை ஆய்வகத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு செல்லும் திட்டத்தில்ஒருமுக்கிய முன்னேற்றநடவடிக்கையாக, எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRMIST), நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்ததாங்கள் உருவாக்கி, அதற்காக காப்புரிமை பெற்ற மூலிகை மருந்தை இந்தியா முழுவதும் தயாரித்து விற்பனை செய்வதற்காக ‘டாக்டர் ஸ்ரீவர்மாஸ் வெல்னஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்துடன் பிரத்யேகஉரிமையைவழங்காதஒருஒப்பந்தத்தை செய்துள்ளது.இந்தவாழ்நாள் ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ. 125 லட்சமாகும்.

சென்னை கிண்டியில் உள்ள ரமாடா பிளாசாஹோட்டலில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்நிகழ்வுநடைபெற்றது.எஸ்ஆர்எம் பல்கலையின்வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் இவ்விழாவிற்குத் தலைமை வகித்தார்.இந்நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சி.முத்தமிழ்ச்செல்வன், பதிவாளர் முனைவர் எஸ்.பொன்னுசாமி மற்றும் டாக்டர் ஸ்ரீவர்மாஸ் வெல்னஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஸ்ரீவர்மா, இயக்குநர் டாக்டர் ஹெனோக் மார்சியோ ஆகியோர் பங்கேற்றனர்.

எஸ்ஆர்எம்கல்விநிறுவனத்தின் இந்திய மருத்துவ முறைகள் நிறுவனத்தின் (IIISM) டீன் டாக்டர் சதீஷ் குமார் மற்றும் அவரது ஆராய்ச்சிக் குழுவினரால் இந்த மூலிகைதயாரிப்புமருந்து உருவாக்கப்பட்டது.நீரிழிவை (சர்க்கரைநோய்) கட்டுப்படுத்த ஒருங்கிணைந்துசெயலாற்றும்பல்வேறு மூலிகைகளின் கூட்டுச் சேர்க்கையாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் (எதிர்உயிர்மக்கி) சக்தியை இம்மருந்துவழங்குகிறது, நீரிழிவு நோயால் சிறுநீரகம் மற்றும் இதயத்திற்கு ஏற்படக்கூடியசிக்கல்களைகுறைத்துஅந்தஉறுப்புகளைபாதுகாப்பதும்இந்தசிகிச்சைமருந்தின்இலக்காகும்.

இம்மூலிகைமருந்தைஉருவாக்கியஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து செயல்படுவது, தொழில் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதுமற்றும்ஒப்பந்தத்தை வடிவமைத்துச் செயல்படுத்துவது வரை இந்த உரிமம் வழங்கும் முழு நடைமுறையையும் எஸ்ஆர்எம் தொழில்நுட்பப் பரிமாற்றஅலுவலகம் முன்னெடுத்தது.ஒப்பந்தக் காலம் முழுவதும் இதன் செயல்பாடுகள் மற்றும் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதையும் இக்குழு கண்காணிக்கும்.தொழில்நுட்ப உரிமம் வழங்குதல் மற்றும் கல்வித்துறை-தொழில்துறைஇணைந்துமேற்கொள்ளும் கூட்டு முயற்சிகள் மூலம் புதிய கண்டுபிடிப்புகளைமக்கள்பயன்பாட்டிற்கானதயாரிப்புகளாகதொழில்துறைக்குவழங்கும்பணியை எஸ்ஆர்எம் தொழில்நுட்பப் பரிமாற்ற அலுவலகம் செய்து வருகிறது.

எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் இதுவரை 1,171 காப்புரிமைகளுக்கு விண்ணப்பித்ததில், 1,107 வெளியிடப்பட்டுள்ளனமற்றும் 638 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.பெறப்பட்டகாப்புரிமைகளின்விகிதம் 75%-க்கும்அதிகம்என்பதுஇதன்சிறப்பைசுட்டிக்காட்டுகிறது.தொழில்துறையுடன்வலுவான கூட்டாண்மைகளை உருவாக்குவதுஇப்பல்கலையின்குறிக்கோளாகும்.மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் புதிய சிந்தனைகளைச் சந்தைக்கு ஏற்ற தயாரிப்புகளாக மாற்ற உதவும் நேரடி ஆய்வகங்களை அமைப்பதன் வழியாக, தொழில்நுட்பப் பரிமாற்றத்தில் ஒரு முன்னோடி மையமாக உருவெடுப்பதுஇதன்நோக்கமாகவும், செயல்திட்டமாகவும்இருக்கிறது.

இந்நிகழ்வில் எஸ்ஆர்எம்பல்கலையின்வேந்தர் டாக்டர் டி.ஆர். பாரிவேந்தர் பேசுகையில்:“ஆராய்ச்சியின்விளைவானகண்டுபிடிப்புஆய்வகத்தை விட்டு வெளியே வந்து, மக்களுக்குப் பயன்படும்போதுதான் உண்மையிலேயே வெற்றி பெறுகிறது.நமது ஆராய்ச்சியாளர்களும், தொழில் நிறுவனங்களும் ஒரே இலக்கைநோக்கிமுனைப்புடன்இணைந்து செயல்பட்டால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு இந்த ஒப்பந்தமே சான்று.எஸ்ஆர்எம்-இல் நடைபெறும் ஒவ்வொரு சிறந்த ஆராய்ச்சியும் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்; இந்திய மருத்துவ முறைகளில் நாங்கள் செய்துள்ள இந்தச் சாதனை அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.டாக்டர் சதீஷ் குமார் மற்றும் அவரது குழுவினரைநான்மனமாரபாராட்டுகிறேன்.இந்த ஒப்பந்தசெயல்முறையை தொடக்கம் முதல் இறுதி வரை சிறப்பாக வழிநடத்தி எஸ்ஆர்எம் தொழில்நுட்பப் பரிமாற்ற அலுவலகத்திற்கு எனது நன்றிகள்,” என்றார்.

இந்திய மருத்துவ முறைகள் நிறுவனத்தின் (IIISM) டீன் டாக்டர் சதீஷ் குமார் கூறுகையில்: “வெறுமனே ஒரு மருந்துதயாரிப்பை உருவாக்குவது மட்டுமல்லாமல், மக்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பயனுள்ள ஒரு மருத்துவதீர்வை வழங்குவதே எங்கள் நோக்கமாக இருந்தது.நீரிழிவு நோய் காலப்போக்கில் முழு உடலையும் பாதிக்கக்கூடியது என்பதால், இரத்த சர்க்கரையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உடல் நலனையும் காக்கும் மூலிகைகளின் கூட்டுச் சேர்க்கையில் நாங்கள் கவனம் செலுத்தினோம்.இம்மருந்து மக்கள் பயன்பாட்டிற்காக சந்தைப்படுத்தலுக்கானஉரிமம் பெற்றிருப்பது எங்கள் ஒட்டுமொத்த குழுவிற்கும் பெருமையான தருணம்.இப்பயணத்தின்ஒவ்வொரு கட்டத்திலும் எங்களுக்கு உறுதுணையாக இருந்த பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும், தொழில்நுட்பப் பரிமாற்ற அலுவலகத்திற்கும் நன்றி,” என்றார்.

டாக்டர் ஸ்ரீவர்மாஸ் வெல்னஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், டாக்டர் ஸ்ரீவர்மா,கூறுகையில்:“எஸ்ஆர்எம் பல்கலையுடன்இணைந்து செயல்படுவதிலும், மிகுந்த கவனத்துடன் ஆராய்ச்சி செய்து உருவாக்கப்பட்ட இம்மருந்தின் தயாரிப்பு உரிமையைப் பெறுவதிலும் நாங்கள் பெருமை கொள்கிறோம்.இம்மருந்து எவ்வளவு அக்கறையுடனும் தரத்துடனும் உருவாக்கப்பட்டதோ, அதே தரத்துடன் இதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுஎமதுபொறுப்பாகும்.இந்த ஒத்துழைப்பும், ஒப்பந்தமும் சுமுகமாக நடைபெற ஆதரவுவழங்கிய வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர், டாக்டர் சதீஷ் குமார் மற்றும் எஸ்ஆர்எம் தொழில்நுட்பப் பரிமாற்ற அலுவலகத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.நாங்கள்இணைந்துமேற்கொள்ளும்இப்பயணம் தொடர்ந்துநீடிப்பதுடன்சமூகத்திற்குமிகவும் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறோம்,” என்றார்.