Tamilசெய்திகள்

இந்தியாவில் இயங்கி வந்த வாடிக்கையாளர்கள் சேவை மையக் குழுவை ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்த அமெரிக்க வங்கி!

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வங்கி ஒன்று, இந்தியாவில் இயங்கி வந்த தனது ஒட்டுமொத்த வாடிக்கையாளர் சேவை மையக் குழுவையும் (Customer Support Team) சேர்ந்த 80 ஊழியர்களை வெறும் 5 நிமிட கூகுள் மீட் (Google Meet) வீடியோ அழைப்பு மூலம் பணிநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

பணிச் சூழல் காரணமாக அன்றைய தினம் ஊழியர்களை வீடுகளிலிருந்தே பணிபுரிய (Work from Home) அறிவுறுத்திய அந்நிறுவனம், மாலை ஷிஃப்ட் பணிகளின் இடையே திடீரென அவசர வீடியோ அழைப்பை ஏற்பாடு செய்து, இந்திய வாடிக்கையாளர் சேவைப் பிரிவைச் சேர்ந்த 80 ஊழியர்களும் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

எந்தவித முன்னறிவிப்புமின்றி, வெறும் 5 நிமிடங்களில் 80 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த இந்த இரக்கமற்ற கார்ப்பரேட் நடவடிக்கை சமூக வலைதளங்களில் கடுமையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கை காரணமாக வேலைவாய்ப்புச் சந்தை மிகவும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், ஊழியர்கள் தங்களது தற்போதைய பணிப் பாதுகாப்பில் கவனமுடன் இருக்குமாறு தொழில்முறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.