Tamilசெய்திகள்

இன்னும் 25 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதலமைச்சராக தொடர்வார் – அமைச்சர் என்.ஆனந்த்

மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழக அமைச்சர் என். ஆனந்த், வரவிருக்கும் ஆண்டுகளில் தற்போதைய முதல்வர் விஜய் தான் தொடர்ந்து ஆட்சியில் இருப்பார் என்றும், இன்னும் 25 ஆண்டுகளுக்கு அவர்தான் முதலமைச்சராகத் தொடர்வார் என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

அரசுப் பதவி என்பது சாதாரணமானதல்ல என்றும், மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஊழல் இல்லாத ஆட்சியை முதல்வர் விஜய் வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களை விடச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் இந்த அரசில், ஊழலுக்கே இடமில்லை என்றும், மக்கள் நலனுக்காகச் சேவை செய்வது மட்டுமே தங்களின் ஒரே நோக்கம் என்றும் அமைச்சர் பெருமிதத்துடன் கூறினார்.

மேலும், மக்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் முதல்வர் விஜய்யின் வெற்றிக்காகவே வழங்கப்பட்டவை என்றும், எதிர்காலத்திலும் எந்தத் தவறும் செய்யாமல் மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றித் தொடர்ந்து சேவையாற்றுவோம் என்றும் அவர் அந்த உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.