Tamilசெய்திகள்

முதலமைச்சர் ஜோசப் விஜயை சந்தித்த ராகுல் காந்தி

தமிழக முதலமைச்சர் விஜய்யின் சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசியுள்ள நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது. கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சந்திப்பின் போது பிரம்மாண்ட மதிய விருந்து பரிமாறப்பட்டதுடன், இருவரும் பல்வேறு அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.

‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி’ முறைப்படி அறிவிக்கப்பட்டு, தவெக தலைமையில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணி உறுதியான பிறகு நடைபெறும் முதல் நேரடிச் சந்திப்பு இது என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, சென்னை தீவு திடலில் கல்லூரி மாணவர்களுக்காக மாலை நடைபெறவிருக்கும் சிறப்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக இருவரும் ஒரே காரில் புறப்பட்டுச் சென்றது தமிழக அரசியல் களத்தில் கூடுதல் கவனம் ஈர்த்துள்ளது.