Tamilவிளையாட்டு

பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் – ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் வெற்றி

அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 38 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய அயர்லாந்து அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 101 ரன்னே எடுக்க முடிந்தது. பாகிஸ்தான் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 17.3 ஓவரில் 120 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா 3-வது வெற்றியை பெற்றது. நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *