Tamilசெய்திகள்

சென்னை மாவட்ட தேர்தல் நிலவரம் – காலை 9 மணி வரை 16.5% வாக்குப்பதிவு!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரப்படி, இன்று காலை 9:00 மணி நிலவரப்படி சென்னையில் ஒட்டுமொத்தமாகச் சுமார் 16.5% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, விருகம்பாக்கம் தொகுதியில் அதிகபட்சமாக 18.85 சதவீதமும், தியாகராய நகர் தொகுதியில் 18.75 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேவேளையில், குறைந்தபட்சமாகத் திரு-வி-க நகர் (14.38%) மற்றும் ராயபுரம் (14.39%) தொகுதிகளில் வாக்குப்பதிவு சற்று மந்தமாகத் தொடங்கியுள்ளது.

இதர முக்கிய தொகுதிகளான கொளத்தூரில் 17.51%, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் 15.7%, மற்றும் மயிலாப்பூரில் 14.51% என மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.

இது தோராயமான புள்ளிவிவரம் மட்டுமே என்றும், அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்தும் தரவுகள் முழுமையாகப் பெறப்படும் போது இதில் சிறு மாற்றங்கள் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.