Tamilசெய்திகள்

கல்லீரல் புற நோயாளிகள் பிரிவு மையத்தை தொடங்கிய கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனை

ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான, சென்னை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனை, தனது விரிவான கல்லீரல் சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக, தொடங்கியுள்ள கல்லீரல் புற நோயாளிகள் பிரிவு (OPD) மையத்தை நடிகர் திரு. ஆர்.ஜே. பாலாஜி மற்றும் மருத்துவர் ஜாய் வர்கீஸ் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

பிறந்த குழந்தைகளில் காணப்படும் மரபணு கோளாறுகளில் இருந்து, வயது வந்தோருக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வரை அனைத்து வயதினருக்குமான முழுமையான கல்லீரல் சிகிச்சையை ஒரே இடத்தில் வழங்கும் உயர் திறன் கொண்ட மருத்துவ மையமாக இந்த கிளென்ஈகிள்ஸ் புற நோயாளிகள் பிரிவு மையம் திகழ்கிறது.

கல்லீரல் நோய்களை மதிப்பீடு செய்வதற்கும், கண்டறிவதற்கும், சிகிச்சையளிப்பதற்குமான புதிய, உயர் திறன் கொண்ட மருத்துவ மையமான கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனை கல்லீரல் புற நோயாளிகள் பிரிவு மையத்தை நடிகர், இயக்குனர், வானொலி தொகுப்பாளர் மற்றும் தொண்டு நிறுவனர் திரு. ஆர்.ஜே. பாலாஜி, அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சென்னை கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனையின் கல்லீரல் இயல், மாற்று கல்லீரல் இயலின் இயக்குனர் மருத்துவர் ஜாய் வர்கீஸ், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் குழும தலைமை செயல் இயக்குனர் திரு. அனில் வினாயக், சென்னை கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி மற்றும் மருத்துவமனைத் தலைவர் மருத்துவர் எஸ். நிரஞ்சனி, மற்றும் சென்னை கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் தலைவர், மருத்துவர் பிஸ்வரூப் பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய கல்லீரல் புறநோயாளிகள் பிரிவு மையம், மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை மற்றும் மாற்று அறுவை சிகிச்சையில் உள்ள நீண்டகால அனுபவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி கல்லீரல் சிகிச்சை மையங்களில் ஒன்றாகக் கருதப்படும் இம்மருத்துவமனை, கடந்த ஏழு ஆண்டுகளில் 700-க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

இந்த புறநோயாளிகள் பிரிவு, கல்லீரல் நோய்களின் அனைத்து விதங்களுக்குமான சேவைகளை ஒரே இடத்தில் வழங்குகிறது. இதில் குழந்தைகள் மற்றும் சிசுக்களுக்கான சிறப்பு குழந்தை கல்லீரல் இயல் மற்றும் குழந்தைகள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை; வளர்சிதை மாற்றம் தொடர்பான கொழுப்பு கல்லீரல் நோய் (MASLD) மற்றும் பிற வளர்சிதை மாற்ற கல்லீரல் கோளாறுகளுக்கான விரிவான திட்டம்; கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஒருங்கே ஏற்படும் நோயாளிகளுக்கான ஒரே நேரத்தில் கல்லீரல்-சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் அடங்கிய ஒருங்கிணைந்த ஹெபடோரினல் சிகிச்சை , முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்லீரல் புற்றுநோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கும் சிறப்பு கல்லீரல் புற்றுநோயியல் சேவை; மற்றும் கல்லீரலைப் பாதிக்கும் மரபணு கோளாறுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.

தொடக்க விழாவில் பேசிய, திரு. அனில் வினாயக், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் கல்லீரல் நோய்களின் தன்மை பெரிதும் மாறியுள்ளது எனவும் வைரஸ் ஹெபடைடிஸ் அல்லது மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் சிதைவைத் தாண்டி, உடல் பருமன் மற்றும் நீரிழிவு தொடர்பான வளர்சிதை மாற்ற கொழுப்பு கல்லீரல் நோய், சிசுக்களில் தோன்றும் மரபணு கல்லீரல் கோளாறுகள், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்லீரல் புற்றுநோய்கள், மற்றும் ஒரே நேரத்தில் பல உறுப்புகளைப் பாதிக்கும் ஹெபடோரினல் சிண்ட்ரோம் போன்ற சிக்கலான நிலைகளை இன்று அதிகமாகக் காண்கிறோம் என்றும் தெரிவித்தார். இவை வழக்கமான புறநோயாளர் சிகிச்சை முறையில் கையாளக்கூடியவை அல்ல என்றும் விரைவான கண்டறிதல், ஒருங்கிணைந்த முடிவெடுத்தல் மற்றும் பல்வேறு நிபுணர்களின் கூட்டு அறிவு தேவைப்படுகிறது என்றும் கூறிய அவர், இந்த மேம்படுத்தப்பட்ட கல்லீரல் புற நோயாளிகள் பிரிவு இந்த சிகிச்சைகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மதிப்பீடு மற்றும் கண்டறிதலில் இருந்து மேம்பட்ட மருத்துவ, தலையீட்டு, அறுவை சிகிச்சை மற்றும் மாற்று சிகிச்சை வரை, நோயாளியின் பயணத்தை எளிதாக்கும் ஒரு உயர் திறன் கொண்ட, ஒருங்கிணைந்த மருத்துவ அமைப்பு இது என்றும், நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சரியான சிகிச்சை கிடைப்பதை இந்த புற நோயாளிகள் மையம் உறுதி செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

டாக்டர் ஜாய் வர்கீஸ், உரையாற்றும் போது, கடந்த ஏழு ஆண்டுகளில் தங்கள் மாற்று அறுவை சிகிச்சை முடிவுகள் வலுவான மருத்துவ அடித்தளத்தை அளித்துள்ளன என்று கூறினார். ஆனால் மாற்று அறுவை சிகிச்சை என்பது பெரும்பாலும் ஒரு நோயாளியின் நீண்ட பயணத்தின் பயணத்தின் இறுதிக் கட்டமே என்றும், இந்த மேம்படுத்தப்பட்ட கல்லீரல் புற நோயாளிகள் பிரிவு, கல்லீரல் நோயை முன்கூட்டியே கண்டறிந்து, ஒவ்வொரு கட்டத்திலும் விரிவான சிகிச்சையை வழங்கி, மரபணு கல்லீரல் கோளாறுகளுடன் பிறக்கும் குழந்தைகள் முதல் கல்லீரல் புற்றுநோயுடன் இருக்கும் வயதுவந்தோர் வரை, அனைத்து வயதினருக்கும் ஒரே ஒருங்கிணைந்த அமைப்பில் தடையற்ற சிகிச்சையை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

வளர்சிதை மாற்ற கல்லீரல் நோய், மரபணு கண்டறிதல், துல்லிய மருத்துவம் மற்றும் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் உள்ளிட்ட சிகிச்சைகள் தொடர்ந்து வளர்ச்சியடையும் நிலையில், இன்று வெற்றிகரமாகக் கையாளும் சிக்கலான நிலைகளை மட்டுமல்லாமல், நாளையின் புதிய சவால்களையும் சமாளிக்கும் வகையில், இப்பகுதியின் மிக மேம்பட்ட மருத்துவ சூழல் அமைப்பை உருவாக்குவதே தங்கள் நோக்கமாகும் என்று எடுத்துரைத்தார். எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு மருத்துவ, தலையீட்டு அல்லது அறுவை சிகிச்சை முன்னேற்றமும் இந்த புறநோயாளிகள் பிரிவுடன் ஒருங்கிணைக்கப்படும் என்று கூறிய அவர், இது நாட்டின் மிகவும் சிக்கலான கல்லீரல் பிரச்சனைகளை நிர்வகிப்பதில் நிரூபிக்கப்பட்ட ஒரு பன்னிறுவனத் தன்மை கொண்ட குழுவை நோயாளிகளுக்கு ஒரே இடத்தில் அணுகும் வாய்ப்பை வழங்குகிறது என்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் மாநிலத்திலேயே முதலிடத்தில் உள்ள சென்னை கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனை, இத்திட்டத்தின் கீழ் 200-க்கும் மேற்பட்ட மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது. இம்மருத்துவமனையின் கல்லீரல் நோய் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிறுவனம், தமிழ்நாடு அரசால் ‘சிறந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக் குழு’ என்ற விருதை 2019 ஆம் ஆண்டு பெற்றது.

பிறவி ஹைபராக்சலூரியா வகை II நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உலகின் முதல் இணைந்த உயிருள்ள நன்கொடையாளர் சிறுநீரக மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை உட்பட, பல தேசிய மற்றும் உலகளாவிய சாதனைகளை மருத்துவமனை படைத்துள்ளது. அரிதான மற்றும் சிக்கலான நிலைகளுக்கான இந்தியாவின் பல கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைமுறைகளையும் இது முதல் முறையாக மேற்கொண்டு, கடினமான கல்லீரல் நோய்களை நிர்வகிப்பதில் தனது நிபுணத்துவத்தை நிரூபித்துள்ளது.