மதுரையில் ஜூன் 5, 6 ஆகிய தேதிகளில் மின்தடை அறிவிப்பு
மதுரை மாவட்டத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஜூன் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காலை 9 மணி முதல் பகுதி வாரியாக மதியம் 2, 3 மற்றும் மாலை 5 மணி வரை மின்தடை நிலவும். கிண்ணிமங்கலம், கருமாத்தூர், செக்கானூரணி, கப்பலூர், வலையங்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
