இன்ஸ்டாகிராமில் புதிய வசதி அறிமுகம்!
இன்ஸ்டாகிராம் (Instagram) தளம் தனது பயனர்கள் இனி 90 நிமிடங்கள் வரை நீளமுள்ள வீடியோக்களைப் பகிர்வதற்கான புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போதைய குறுகிய வடிவ வீடியோப் போக்கிலிருந்து மாறி, நீண்ட நேர உள்ளடக்கங்களை உருவாக்க உதவும் வகையில் இந்த மாற்றம் கொண்டுவரப்படுகிறது.
இதன் மூலம் யூடியூப் (YouTube) போன்ற நீண்ட வீடியோ தளங்களுக்குப் போட்டியாக இன்ஸ்டாகிராம் உருவெடுப்பதுடன், படைப்பாளர்களுக்கு (Creators) விரிவான ஆவணப்படங்கள், விரிவுரைகள் மற்றும் பெரிய அளவிலான வீடியோக்களைப் பகிரும் வாய்ப்பையும் அளிக்கிறது.
பயனர்களின் பயன்பாட்டு நேரத்தை அதிகரித்து அவர்களைத் தளத்திற்குள் தக்கவைக்கவும், புதிய விளம்பர வாய்ப்புகளை உருவாக்குவதையுமே இலக்காகக் கொண்டு மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
