ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு! – நாளை முதல் அமலுக்கு வருகிறது
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் கொள்முதல் செலவினங்கள் அதிகரித்துள்ளதைக் காரணம் காட்டி, தனது பால் உபபொருட்களின் விற்பனை விலையை உயர்த்தியுள்ளது. இந்த புதிய மாற்றியமைக்கப்பட்ட விற்பனை விலையானது நாளை (28.10.2026) முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி, 100 கிராம் வெண்ணெய் (Butter-C/T) ₹70, 500 கிராம் நெய் ஜார் ₹400, 1 லிட்டர் நெய் ஜார் ₹780, 15 கிலோ நெய் டின் ₹13,000 என மாற்றப்பட்டுள்ளது. இனிப்புகளின் விலையில், 250 கிராம் மைசூர்பாக் ₹160, 250 கிராம் காஜு கட்லி ₹280, 250 கிராம் குலாப்ஜாமுன் ₹115, 100 கிராம் ரசகுல்லா ₹50, 250 கிராம் பால்கோவா ₹150 மற்றும் 250 கிராம் காஜு பிஸ்தா ரோல் ₹340 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 200 மி.லி மோர் ₹10, 200 மி.லி லஸ்ஸி ₹23, 200 மி.லி மில்க் ஷேக் (அனைத்து வகைகள்) ₹35, 500 மி.லி தயிர் ₹40, 1 கிலோ பிரீமியம் தயிர் ₹130 மற்றும் 80 கிராம் பிஸ்கட் வகைகள் (Cookies) ₹40 என விற்பனை செய்யப்படவுள்ளது.
