பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரைக்காக தயாராகும் மூன்று பிரமாண்ட தேர்கள்
ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற பூரி நகரில், உலகப் புகழ்பெற்ற ஜெகந்நாதர் ரத யாத்திரைக்கான ஆயத்தப் பணிகள் தற்போது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உளி மற்றும் சுத்தியல்களின் ஓயாத சத்தங்களுக்கு இடையே, தங்களின் கைவினைத் திறனால் உலகையே வியக்க வைக்கும் திறமைமிக்க தச்சர்களும் கலைஞர்களும், ரத யாத்திரைக்கான மூன்று பிரம்மாண்ட தேர்களை உருவாக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்;
வரும் ரத யாத்திரையின் போது, மூலவர்களான ஜெகந்நாதர், பாலபத்ரர் மற்றும் தேவி சுபத்ரா ஆகிய தெய்வங்களை ஏந்திச் செல்லவுள்ள ‘நந்திகோஷா’ (Nandighosa), ‘தாலத்வஜா’ (Taladhwaja) மற்றும் ‘தர்பதலன்’ (Darpadalan) ஆகிய மூன்று கம்பீரமான தேர்களும் குறிப்பிட்ட காலத்திற்குள் முழு வடிவத்தைப் பெறுவதற்காக, காலத்தோடு போட்டி போட்டுக் கொண்டு இந்த வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
ஒட்டுமொத்தப் பூரி நகரமே ஆன்மீகக் களையோடு காட்சியளிக்கும் இந்தச் சூழலில், பாரம்பரிய முறைப்படி அச்சு அசலாகத் தயாராகி வரும் இந்தச் புனித ரதங்களின் கட்டுமானப் பணிகளைப் பக்தர்களும் பொதுமக்களும் மிகுந்த ஆவலோடும் பக்திப் பெருக்குடனும் கவனித்து வருகின்றனர்.
