தூத்துக்குடியில் கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சிறுவன் உள்பட இருவர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், வண்டிமலைச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் மதன் (18). இவரும், இவரது நண்பரான 16 வயது சிறுவன் ஒருவரும் சேர்ந்து பொதுமக்களுக்குப் பயத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் வகையில் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களைக் கையில் ஏந்தியபடி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோக்களைப் பதிவிட்டு வந்துள்ளனர்.
இது குறித்துத் தகவல் அறிந்த காயல்பட்டினம் காவல் உதவி ஆய்வாளர் இருதயராஜ் உடனடியாக இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் ரென்னிஸ் தலைமையிலான காவல்துறையினர் மதன் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
