6ஜி தொழில் நுட்பத்தில் இந்தியா தான் உலகை வழிநடத்த வேண்டும் – மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
4ஜி தொழில் நுட்பத்தில் இந்தியா பின்தங்கியிருந்தாலும் 5ஜி-யில் உலக நாடுகளுடன் இணைந்து பயணித்தோம்; ஆனால் அடுத்த கட்டமாக வரவிருக்கும் 6ஜி தொழில் நுட்பத்தில் இந்தியாதான் உலகை வழிநடத்த வேண்டும் என்ற இலக்கை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா முன்வைத்துள்ளார்.
சீனாவிற்கு அடுத்தபடியாகத் தொலைத்தொடர்புத் துறையில் சொந்தமாகத் தொழில்நுட்பத்தை உருவாக்கிப் பயன்படுத்தும் 5-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ள நிலையில், பிஎஸ்என்எல் (BSNL) வாயிலாக இந்தியாவின் ‘சுதேசி 4ஜி ஸ்டேக்’ (Indigenous 4G Stack) தொழில்நுட்பம் ஏற்கனவே நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த சுதேசி 4ஜி கோபுரங்கள் விரைவில் 5ஜி-க்கு உயர்த்தப்பட உள்ள சூழலில், சர்வதேச அளவில் 6ஜி காப்புரிமைகளில் (Patents) குறைந்தபட்சம் 10 சதவீத பங்களிப்பை அளித்து, சர்வதேச 6ஜி தரநிலைகளை நிர்ணயிப்பதில் இந்தியாவே முன்னிலை வகிக்கும் என அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
