Akhilesh Yadav Calls UP CM’s ‘Zero Poverty’ Promise Another Empty Jumla
Samajwadi Party leader Akhilesh Yadav strongly criticized Uttar Pradesh Chief Minister Yogi Adityanath’s recent promise to eliminate poverty from the
Read MoreSamajwadi Party leader Akhilesh Yadav strongly criticized Uttar Pradesh Chief Minister Yogi Adityanath’s recent promise to eliminate poverty from the
Read MorePrime Minister Narendra Modi met Olympic medal winner Karnam Malleswari during his visit to Yamunanagar, Haryana. He praised her for
Read MoreThe National Disaster Response Force (NDRF) recently conducted a series of monsoon and disaster preparedness drills across several districts in
Read MoreArsenal defender Jakub Kiwior said he didn’t feel nervous when he played the biggest match of his career against Real
Read MoreA new report says that 86% of Indian companies have already made a plan to use Generative Artificial Intelligence (GenAI)
Read MorePrime Minister Narendra Modi and Leader of the Opposition Rahul Gandhi greeted the people of Tamil Nadu on the occasion
Read MoreFish prices are rising quickly in many parts of Tamil Nadu as the state gets ready for the 61-day annual
Read Moreபாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த தே.மு.தி.க. தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்று கடந்த வாரம் பிரேமலதா கூறி இருந்தார். இதற்கிடையே சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணிக்குள் தே.மு.தி.க.வையும் கொண்டுவர முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடியை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா புகழ்ந்துள்ளார். கூட்டணி தொடர்பான யூகங்கள் எழுந்து வரும் நிலையில் மோடியை புகழ்ந்து அளித்த பேட்டியை பிரேமலதா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளம் ஒன்றுக்கு அ�
Read Moreஅண்டை நாடான மியான்மரில் கடந்த மாதம் 29-ந்தேதி சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் இடிந்து
Read Moreசென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1000 பழங்குடியினர் குடியிருப்புகளை திறந்து வைத்து 49,542 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள். இந்த சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை தீண்டாமை குற்றங்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக முழங்கி வரலாற்றை மாற்றிய புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள். அதனால்தான் திராவிட மாடல் ஆட்சியிலே தந்தை பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாகவும், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும் அறிவித்தோம். இன்று காலையில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளோம். சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் வேகமாக நகர வேண்டும். இந்த மண்ணில் இருக்கிற ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் மாற்றத்திற்கான சிந்தனை வலுப்பெற வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளோம். புரட்சியாளர் அம்பேத்கரை உயர்த்தி பிடித்துக் கொண்டாடும் இயக்கம் தான் திராவிட இயக்கம். அவர் எழுதிய சாதிய ஒழிக்க வழி என்ற நூலை 1930-ம் ஆண்டே தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார். புரட்சியாளர் அம்பேத்கர் நமக்கான அடையாளம் என்று தொடர்ந்து முழங்கிக் கொண்டிருக்கிறோம். சமூக நீதி, சமத்துவம், தலித் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் புரட்சியாளர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் மக்களவையில் 2 முறையும், மாநிலங்களவையில் ஒரு முறையும் பங்கெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலை நாடாளுமன்றத்தில் ஒலித்தவர். அவர் இன்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றியதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் சைதாப்பேட்டையில் எம்.சி.ராஜா மாணவர் விடுதியை திறந்து வைத்துவிட்டு வந்துள்ளேன். இந்த மேடையில் சகோதரர் திருமாவளவன் மகிழ்ச்சியோடு அமர்ந்துள்ளார். காரணம் அவரும் அந்த விடுதியில் தங்கி படித்தவர்தான். இத்தகைய பெருமைக்குரிய விடுதியை திறந்து வைக்கிற நாளில் அந்த விடுதியின் முன்புறம் பெருந்தலைவர் எம்.சி.ராஜாவின் மார்பளவு சிலை மிக விரைவில் வைக்கப்படும் என்பதை பெருமையோடு அறிவிக்கிறேன். திராவிட மாடல் ஆட்சியில் இன்றைக்கு எண்ணிலடங்கா சாதனைகளை செய்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் சென்னையில் உள்ள பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த மாணவர்களுக்கு இந்த எம்.சி.ராஜா விடுதி பேருதவியாக இருக்கும். எனவே சமூக நீதியை நிலை நாட்டுகிற அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான நலத்திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் சமூக நீதி மற்றும் சமத்துவ சிந்தனை குறித்து 6,977 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் திருவள்ளுவர் நாள் அன்று டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் 174 மாணவர்கள் இங்கு வந்துள்ளனர். இவர்கள் வந்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஏனென்றால் இது திராவிட மாடல் அரசின் சாதனை. மாணவர்களின் கல்விக்காக பல திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமல்ல, அதிக எண்ணிக்கையில் விடுதிகளையும் கட்டி இருக்கிறோம். மாணவர்களின் முன்னேற்றம் என்பது கண்கள் மாதிரி என்றால், பெண்களின் முன்னேற்றம் என்பது இதயத்துடிப்பு மாதிரி. அதைத்தான் புரட்சியாளர் அம்பேத்கர் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அந்த சமூகத்தின் பெண்கள் முன்னேற்றத்தை வைத்து அளவிடுகிறேன் என்று சொன்னார். அதனால்தான் பெரிதும் விவசாய தொழிலாளர்களாக இருக்கிற ஆதிதிராவிட மகளிரை நில உடமையாளராக மாற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு ‘நன்னி லம்’ என்ற மகளிருக்கான நிலம் வாங்கும் திட்டத்தை செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். அண்ணல் அம்பேத்கரின் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 3,950 தொழில்முனைவோருக்கு ரூ.630 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.250 கோடி வீதம் 4 ஆண்டுகளில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் தொல் குடி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று நான் உறுதியோடு சொல்லிக் கொள்ள விரும்புவது ஆதிதிராவிட மக்களின் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு எப்போதும் துணை நிற்கும். சாதியின் பெயரால் தொடக்கூடாது, கண்ணில் படக்கூடாது, தெருவில் நடக்கக் கூடாது, கோவிலுக்குள் நுழையக் கூடாது என்பதை எல்லாம் நம்முடைய கொள்கைகளால் போராட்டங்களால் இடைவிடாத பரப்புரைகளால் உடைத்து நொறுக்கி விட்டோம். கல்வியும், படிப்பும், வேலையும், பதவியும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கையில் அதிகாரம் செலுத்தும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதுதான் திராவிட இயக்கம் ஏற்படுத்தி இருக்க கூடிய மாற்றம். சாதிதான் பிளவுபடுத்தும் முதலாவது சக்தி. அந்த ஆயிரம் ஆண்டு அழுக்கை ஒழிக்கத்தான் நாம் பாடுபட்டு கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் தமிழர்கள் என்று உணர வைப்பதற்கு தான் இன்று பாடுபடுகிறோம். இந்த ஆட்சிதான் பொற்காலம். நமது பாதையும், பயணமும் மிக நீண்டது. என்னைப் பொறுத்தவரைக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவச் சமுதாயம் அமைய வேண்டும். வெறுப்பு அரசியலை விட, அன்பை விதைக்க கூடிய அரசியல்தான் வலுவானது. ஆற்றல் வாய்ந்தது என்று நான் நம்புகிறேன். தமிழ், தமிழர் என்ற ஒன்றுதான் நம்மை ஒன்றிணைக்கும். சமூக நீதி, பொதுவுடமை சமத்துவம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க புரட்சியாளர் பிறந்தநாளில் மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம். ஜெய்பீம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசும்போது இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் வகையில் தமிழ்நாட்டை உயர்த்தி இருக்கிறார். இந்தியாவில் அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடும் முதல் மாநிலம் தமிழ்நாடு என்று கூறினார்.
Read More