Tamil

Tamilசெய்திகள்

தங்கம் விலை குறைந்தது – சவரன் ரூ.72,290-க்கு விற்பனை

தங்கம் விலை தினமும் பேசப்படக்கூடிய ஒரு சொல்லாக மாறிவிட்டது. ஒவ்வொரு நாளும் ‘கிடுகிடு’வென தங்கம் விலை உயர்ந்து கொண்டே வந்து, புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது. அதிலும் கடந்த 9-ந்தேதியில் இருந்து ராக்கெட் வேகத்தில் விலை ஏறி வருகிறது. கடந்த 13- ந்தேதி ஒரு சவரன் ரூ.70 ஆயிரம் என்ற உச்சத்தை கடந்து இவ்வளவு விலையா? என அப்போது பேசப்பட்டது. அதன் பிறகு 2 நாட்களுக்கு விலை குறைந்து அனைவரும் சற்று மூச்சுவிட்ட நிலையில், மீண்டும் 16-ந்தேதியில் இருந்து உயரத் தொடங்கியது. இந்த முறை ராக்கெட் வேகத்தைவிட ‘ஜெட்’ வேகத்தில் விலை எகிறி வருகிறது. இதன் விளைவால் கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.71 ஆயிரம், 21-ந்தேதி ரூ.72 ஆயிரம் என்ற இதுவரை இல்லாத உச்சத்தையும் தாண்டியிருந்தது. இதன் தொடர்ச்சியாக தங்கம் விலை நேற்றும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 15-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 120-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.275-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 200-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 290-க்கும், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.72 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.275 குறைந்து ரூ.9,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.111-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More
Tamilசெய்திகள்

மெகுல் சோக்சிக்கு ஜாமீன் வழங்க மறுத்த பெல்ஜியம் நீதிமன்றம்!

இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரிகளான நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே கரீபியன் நாடான ஆண்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்சி, 2021ம் ஆண்டு டொமினிகா நாட்டிற்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் கடைசியாக மெகுல் சோக்சி தஞ்சம் அடைந்தார். மெகுல் சோக்சியின் மனைவி பிரீத்தி, பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர் என்பதால் அதன்மூலம் மெகுல் சோக்சியும் பெல்ஜியத்தின் தற்காலிக குடியுரிமையை பெற்றார். மெகுல் சோக்சி எதிராக இரண்டு பிடிவாரண்ட்டுளை மும்பை நீதிமன்றம் கடந்த 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிறப்பித்தது. இந்நிலையில் புற்று நோய் சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து மருத்துவமனைக்கு மெகுல் சோக்சி செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், அவரை பெல்ஜியம் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து பெல்ஜியம் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ஜாமின் கோரி பெல்ஜியம் நீதிமன்றத்தில் மெகுல் சோக்சி மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மெகுல் சோக்சிக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. இதனிடையே மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கான பணியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

Read More
Tamilசெய்திகள்

ஓசூரில் புதிய விமான நிலையம்! – இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தாக்கல் செய்த விமானத்துறை அமைச்சகம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரமானது தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. சர்வதேச நிறுவனங்கள் பலவும் கால்தடம் பதித்து வருகின்றன. இதற்கேற்ப ஓசூரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு

Read More
Tamilசெய்திகள்

கவாசகியின் நின்ஜா 650 மேம்பட்ட மாடல் இந்தியாவில் அறிமுகம்!

கவாசகி இந்தியா நிறுவனம் மேம்பட்ட நின்ஜா 650 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 2025 கவாசகி நின்ஜா 650 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 7

Read More
Tamilசெய்திகள்

பிரதமர் மோடி இரண்டு பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார்!

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சவுதி அரேபியாவின் புறப்படுகிறேன், அங்கு பல்வேறு கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளேன். சவுதி அரேபியாவுடனான நமது வரலாற்று உறவுகளை இந்தியா மதிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இருதரப்பு உறவுகள் குறிப்பிடத்தக்க வேகத்தை அடைந்துள்ளன. மூலோபாய கூட்டாண்மை கவுன்சிலின் 2-வது கூட்டத்தில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். அங்குள்ள இந்தியர்களுடன் கலந்துரையாடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read More
Tamilசெய்திகள்

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை – சவரன் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது

தங்கம் விலை கடந்த 9-ந் தேதியில் இருந்து ‘கிடுகிடு’வென உயர்ந்து வந்து, கடந்த 12-ந்தேதி ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 160-க்கு விற்பனை ஆனது. இது அப்போது இதுவரை இல்லாத உச்சமாக பார்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்த வண்ணம் காணப்படுகிறது. தினந்தோறும் விலை உயர்ந்து இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More
Tamilசெய்திகள்

டாக்டர்.சாந்தாவின் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பிரபல புற்றுநோய் நிபுணரும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் முன்னாள் தலைவருமான டாக்டர் சாந்தாவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை அடையாறு பகுதியில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் டாக்டர் சாந்தாவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவரது நினைவு அருங்காட்சியகத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். ————————- மறைந்த போப் பிரான்சிஸுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம்! கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் சுவாசக் கோளாறு காரணமாக நேற்று காலமானார். போப்பின் உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட உள்ளது. அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Read More
Tamilசெய்திகள்

திருப்பதி கோவிலுக்கு காரில் வரும் பக்தர்களை எச்சரித்த காவல்துறை!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க சொந்த வாகனங்களில் வருபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஷர்ஷவார்த்தன் ராஜு எச்சரிக்கை விடுத்து உள்ளார். கோடை வெப்பம் காரணமாக சமீபத்தில் திருப்பதி மலை பாதையில் வந்த 2 கார்கள் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து நிபுணர்கள் அளித்த அறிக்கை படி, பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 500 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வரும் வாகனங்கள் அதிகம் வெப்பம் அடைகிறது. மலைப்பாதையில் பயணம் செய்வதற்கு முன் 30 நிமிடங்கள் காரை நிறுத்தி அணைத்து வைக்க வேண்டும். எஞ்சின் கூல் அண்ட் ஆயில், பிரேக், ஏசி ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும். மலைப்பாதையில் வாகனங்களில் செல்லும் போது ஏசியை பயன்படுத்தக் கூடாது. அடிக்கடி பிரேக் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். நியூட்ரலில் வாகனங்களை இயக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

Read More
Tamilசெய்திகள்

புறநகர் ஏசி மின்சார ரெயில்களின் கட்டணம் குறைக்கப்படாது – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ஏ.சி. வசதியுள்ள மின்சார ரெயில் சேவை கடந்த 19-ந்தேதி தொடங்கியது. சென்னையில் வெயில் கொளுத்தி வரும் வேலையில் ஏ.சி. மின்சார

Read More
Tamilசெய்திகள்

எடப்பாடி பழனிசாமி மற்றும் நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உடன் பா.ஜ.க. மாநில தலைவரும் எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். இவர்களது சந்திப்பானது எதிர்க்கட்சி தலைவர் அறையில் சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்கு பின் அ.தி.மு.க. மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, தளவாய் சுந்தரம், கடம்பூர் ராஜூ ஆகியோரை சந்தித்து நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். முக்கிய பிரச்சனைகளை ஒன்று சேர்ந்து எழுப்புவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி உறுதியான பின்பு எடப்பாடி பழனிசாமி- நயினார் நாகேந்திரன் முதன்முறையாக சந்தித்து பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More