பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சட்டசபையில் 110 விதிகளின் கீழ் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: * மொழி, உணர்ச்சி, மொழி, மானம், மொழி பெருமிதம் ஆகியவற்றின் மொத்த வடிவம் பாவேந்தர் பாரதிதாசன். * பாரதிதாசன் எழுத்துகளை மேற்கோள்காட்டி பேசாத தலைவர்களே இல்லை. * பல இளம் கவிஞர்களை உருவாக்கியவர் பாவேந்தர் பாரதிதாசன். * பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்.25 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும். * தமிழர் உணர்விலும் குருதியிலும் கலந்த புரட்சி கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாளை ஒட்டி தமிழ் வார விழா கொண்டாடப்படும். * கவிஞர் பாரதிதாசனை போற்றும் வகையிலான அறிவிப்பை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். * பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும். * அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள், கருத்தரங்குகள் நடைபெறும்.
Read More