ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஸ்ருதி ஹாசன் குரலில் ‘காதலிக்க நேரமில்லை’ பட பாடல் பதிவானது
“கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில், இசை புயல் A.R .ரகுமானின் இசையில், ஸ்ருதிஹாசனின் குரலில் “காதலிக்க நேரமில்லை” என்ற திரைப்படத்திற்காக நான் எழுதியப் பாடல் பதிவானது” என பாடலாசிரியர் சினேகன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிவா, பிரியா ஆனந்த் நடித்த ‘வணக்கம் சென்னை’ படம் மூலம் இயக்குநர் ஆனவர் கிருத்திகா உதயநிதி. அடுத்து விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’, ‘பேப்பர் ராக்கெட்’ என்ற வெப்தொடர் ஆகியவற்றை இயக்கினார். அடுத்ததாக இவர் ‘காதலிக்க நேரமில்லை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ளனர். யோகிபாபு, டி.ஜே.பானு, ஜான் கொக்கைன் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
தமிழில் இதற்கு முன் ஸ்ரீதர் இயக்கத்தில் 1964-ம் ஆண்டு இதே தலைப்பில் படம் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ரொமான்ஸ் படமான இப்படத்தின் ஷூட்டிங் மொத்தமாக நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இந்த படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக வருவதாக சொல்லப்படுகிறது.