ஐ.பி.எல் கிரிக்கெட் 2023 – பஞ்சாப்பை வீழ்த்தி குஜராத் வெற்றி
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்று நடக்கும் 18-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் டக் அவுட்டானார்.
கெப்டன் ஷிகர் தவான் 8 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய மேத்யூ ஸ்காட் 24 பந்தில் 36 ரன்கள் எடுத்தார். பானுகா ராஜபக்ச 20 ரன்னும், ஜிதேஷ் சர்மா 25 ரன்னும், சாம் கர்ரன் 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ஷாருக் கான் 2 சிக்சர் உள்பட 22 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 154 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. இதில், ஷூப்மன் கில் 49 பந்துகளுக்கு 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, சாஹா 30 ரன்களும், சாய் சுதர்ஷன் 19 ரன்களும், ஹர்திக் பாண்டியா 8 ரன்களும் எடுத்தனர். டேவிட் மில்லர் 16 ரன்களும், ராகுல் 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில் 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து குஜராத் அணி அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது.