சசியின் படத்தை முடித்த ஜி.வி.பிரகாஷ், சித்தார்த்!
‘பிச்சைக்காரன்’ பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் குமார், லிஜோமோள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயக்குநர் சசி மற்றும் நடிகர் சித்தார்த்துடன் பயணித்தது இனிமையானது. அருமையான கதை. என்று குறிப்பிட்டுள்ளார்.
அக்காள்-தம்பி பாசத்தை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக சித்தார்த்தும், பைக் ரேசராக ஜி.வி.பிரகாஷும் நடித்துள்ளனர். ஒரு முக்கிய வேடத்தில் காஷ்மீரா அறிமுகமாக, இன்னொரு முக்கிய வேடத்தில் மதுசூதனன் நடிக்கிறார்.
அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை இந்த படத்தை தயாரிக்கிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளராக சித்து குமார் அறிமுகம் ஆகிறார். படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.