நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு மாவேரி பாரம்பரிய நடத்துடன் கூடிய பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது
ஆசிய-பசிபிக் நாடுகளுக்கான பயணத்தின் இறுதிப் பகுதியாக நியூசிலாந்து நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஆக்லாந்தில் உள்ள அரசு இல்லத்தில் அந்நாட்டின் பழங்குடியினரான மவோரி (Māori) சமூகத்தின் பாரம்பரிய ‘ஹாகா’ (Haka) நடனத்துடன் கூடிய பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நேரில் வந்து வரவேற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், மவோரி கலாசாரத்தின்படி விருந்தினரின் அமைதியான நோக்கத்தை உறுதிப்படுத்தும் ‘போகிரி’ (Pōwhiri) சடங்குகளும் நடத்தப்பட்டன. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் நியூசிலாந்துக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முக்கியச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு ‘வியூகக் கூட்டாண்மை’ (Strategic Partnership) நிலைக்கு உயர்த்தப்பட்டதோடு, இருதரப்பு வர்த்தகத்தை வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் 35,000 கோடி ரூபாயாக (இரண்டு மடங்கு) உயர்த்துவதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுப் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
