சினிமா பிஸினஸ் பற்றி எனக்கு தெரியாது – நடிகர் தினேஷ்
தினேஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’. அதியன் ஆதிரை இயக்கியுள்ள இப்படத்தில் தினேஷுக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 6ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் இயக்குனர் அதியன் ஆதிரை, நடிகர் தினேஷ், நடிகை ஆனந்தி உள்ளிட்ட படக்குழுவினருடன் தயாரிப்பால் பா.இரஞ்சித் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் கலந்துக் கொண்டனர்.
தினேஷ் பேசும்போது, ‘சக்சஸ் பிஸ்னெஸ் பத்திலாம் எனக்குத் தெரியாது. ஒரு படம் ஜெயித்தபிறகு பேசும்போது தான் எனர்ஜியாக இருக்கும். இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது எனக்கு எப்போதுமே பதட்டமாக இருக்கும். ஒரு இரும்பு கடையில் வேலை பார்ப்பவனுக்குள் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்பதை இயக்குனர் அதியன் பேசும்போது அதிகமாக வலித்தது. இந்தப்படத்திற்காக பலருக்கும் நன்றி சொல்ல வேண்டும். அனைவருக்கும் நன்றி’ என்றார்.