டி20 போட்டிகளில் சில மாற்றங்கள் தேவை – யோசனை கூறும் ஷேன் வார்னே
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகருமான ஷேன் வார்னே, 20 ஓவர் கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்கு மூன்று யோசனைகளை முன் வைத்துள்ளார். ‘ஒவ்வொரு மைதானத்திலும் பவுண்டரி தூரம் அதிகமாக இருக்க வேண்டும்.
சிறிய மைதானமாக இருந்தால் ஆடுகளத்தில் புற்கள் நிறைய இருக்க வேண்டும். இன்னிங்சில் ஒரு பவுலர் அதிகபட்சமாக 4 ஓவர் வீசலாம் என்பதை 5 ஓவர்களாக மாற்ற வேண்டும். ஆடுகளம் முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கக்கூடாது. டெஸ்ட் கிரிக்கெட்டின் 4-வது நாள் ஆடுகளம் (பிட்ச்) போல் இருக்க வேண்டும். சிக்சர்கள் மட்டும் தேவை என்று இல்லாமல் பேட்டுக்கும், பந்துக்கும் இடையே சரிசம போட்டி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று வார்னே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.