தொழில் முனைவோராக உருவெடுத்துள்ள 22 சதவீதத்திற்கும் அதிகமான கல்லூரி மாணவர்கள்! – ஐஐடி ஆய்வில் தகவல்
ஐஐடி மண்டி (IIT Mandi) நடத்திய புதிய ஆய்வின்படி, இந்தியாவில் 22 சதவீதத்திற்கும் அதிகமான கல்லூரி மாணவர்கள் சொந்தமாக தொழில்களைத் தொடங்கி தொழில் முனைவோராக உருவெடுத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களிடையே தொழில்முனைவு மற்றும் ஸ்டார்ட்-அப் தொடங்க ஆர்வமும் திறனும் அதிகரித்து வருவதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி, நவீன யோசனைகள் மற்றும் சுயசார்பு மீதான மாணவர்களின் ஈர்ப்பு ஆகியவை கல்லூரிப் பருவத்திலேயே அவர்களை தொழில் தொடங்கும் பாதைக்கு வழிநடத்தியுள்ளன. கல்லூரி நிலையிலேயே மாணவர்கள் வணிகச் செயல்பாடுகளில் இறங்குவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் பெருமளவில் துணைபுரியும் என இவ்வாப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது.
