Tamilசெய்திகள்

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தை (TNRERA) சீரமைத்து, புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை (G.O.(Ms.)No.191, நாள்: 21.10.2026) வெளியிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் பிரதிநிதி, வீட்டுவசதித் துறைச் செயலாளர் மற்றும் சட்டத்துறைச் செயலாளர் அடங்கிய தேர்வுக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கே. பணீந்திர ரெட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ரீட்டா ஹரிஷ் தாக்கர், மைதிலி கே. ராஜேந்திரன், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி எஸ். கிருபாகரன் மதுரம் மற்றும் ஓய்வுபெற்ற முதன்மைப் பொறியாளர் கே.பி. சத்தியமூர்த்தி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நாளிலிருந்து இந்த புதிய ஆணையம் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.