நிலநடுக்கத்தால் சுருங்கும் சந்திரன் – விஞ்ஞானிகள் தகவல்
சந்திரன் குறித்து சர்வதேச விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவின் ‘நாசா’ மையம் கடந்த 1969 மற்றும் 1977-ம் ஆண்டுகளில் சந்திரனுக்கு அப்பல்லோ விண்கலன்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது.
அவை சந்திரனின் மேற்பரப்பில் ஆய்வுகள் மேற்கொண்டன. அதில் சந்திரனின் மேற்பரப்பு திராட்சை பழம் போன்று சுருக்கங்கள் நிறைந்து காணப்பட்டது.
அதை வைத்து தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் சந்திரன் நாளுக்கு நாள் சுருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
சந்திரனில் அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. மேலும் சந்திரனின் உட்பரப்பில் வெப்பமும், குளிரும் மாறி மாறி நிலவுகிறது. இதன் காரணமாக சந்திரன் படிப்படியாக சுருங்கி வருகிறது என விஞ்ஞானி தாமஸ் வாட்டர்ஸ் கூறினார்.