Tamilசெய்திகள்

பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லா கைது

பரூக் அப்துல்லாவின் தந்தை ஷேக் அப்துல்லா காஷ்மீர் முதல்-மந்திரியாக இருந்தபோது 1978-ம் ஆண்டில் பொது பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தார். அப்போது காஷ்மீரில் மரங்களை வெட்டி கடத்துபவர்களை தண்டிக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

அதன்பிறகு முப்தி முகமது சயீத் மத்திய உள்துறை மந்திரியாக இருந்தபோது 1990-ம் ஆண்டில் இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை கையாளவும் இந்த சட்டத்தை போலீசார் பயன்படுத்த தொடங்கினார்கள்.

தந்தை ஷேக் அப்துல்லா கொண்டு வந்த பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இப்போது மகன் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *