விஜய் ஆண்டனிக்கு வில்லனான பாலிவுட் நடிகர்!
கொலைகாரன், அக்னிச் சிறகுகள் படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன் என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார். பாபு யோகேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சோனு சூட் வில்லனாகவும், பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விஜய் ஆண்டனி – ரம்யா நம்பீசன் மற்றும் விஜய் ஆண்டனி, சோனு சூட் மோதும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.
முதல்முறையாக விஜய் ஆண்டனி படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார்.