வெப் சீரிஸில் நடிக்கும் ஹன்சிகா
ஹன்சிகா தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தை யு.ஆர்.ஜமீல் என்கிற அறிமுக இயக்குநர் இயக்குகிறார். ஹன்சிகா நடிக்கும் 50வது படம் இதுவாகும். இதே போன்று சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ஹன்சிகா வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப் தொடரை அஷோக் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்த பாகமதி படத்தை இயக்கியிருந்தார். இந்த வெப் தொடரில் நடிக்க உள்ள பிற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.