Tamilவிளையாட்டு

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி மழையால் ரத்து

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. அந்த வகையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் நேற்று நடைபெற இருந்தது.

போட்டி நடைபெறும் டர்பனில் மழை பெய்து வருவதால் டாஸ் மற்றும் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் போடப்படாத நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.