Tamilவிளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் – இங்கிலாந்துக்கு 400 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 19-வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் – ஹென்றிக்ஸ் களமிறங்கினர். அதிரடி ஆட்டக்காரர் டிகாக் 4 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதனையடுத்து ஹென்றிக்ஸ் -ரஸ்ஸி வான் டெர் டுசென் ஜோடி சிறப்பாக ஆடினர்.

தென் ஆப்பிரிக்கா அணி 125 ரன்கள் இருந்த போது இந்த ஜோடி பிரிந்தது. ரஸ்ஸி வான் டெர் டுசென் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து ஹென்றிக்ஸ் 85 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த மார்க்ரம் 42 ரன்னிலும் மில்லர் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது தென் ஆப்பிரிக்கா அணியின் ஸ்கோர் 36.3 ஓவரில் 243 ரன்களாக இருந்தது.

இதனையடுத்து கிளாசன் மற்றும் யான்சன் ஜோடி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சரமாறியாக விளாசினர். அதிரடியாக விளையாடிய கிளாசன் சதமும் யான்சன் அரைசதம் அடித்து அசத்தினார். சதம் விளாசிய கிளாசன் 109 ரன்களில் அவுட் ஆனார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த யான்சன் 75 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 399 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் டாப்லி 3 விக்கெட்டும் ஆதில் ரஷித் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.